மாநகராட்சி கல்வி துறை சார்பில் லண்டன் சென்ற மாணவர்கள்: பெற்றோர் நெகிழ்ச்சி

சென்னை: சென்னை மாநகராட்சி கல்வித்துறையானது கிழக்கு ரோட்டரி கிளப்  மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ‘விங்ஸ் பிளை’   திட்டத்தின் மூலம் மாணவ, மாணவியரை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து சென்று வருகின்றனர். இந்நிலையில் 2021-22ம் கல்வியாண்டில் ‘விங்ஸ் பிளை’ திட்டத்தின் மூலம் 70 சென்னை பள்ளிகளில் பயிலும் 10,000 மாணவ, மாணவியர்களுக்கு இடையே 4 நிலைகளில் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் 32 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இறுதிச் சுற்றில் 8 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இவர்களை கல்விச் சுற்றுலாவாக லண்டன் நகருக்கு  அடுத்த மாதம் அழைத்து செல்ல மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இறுதி சுற்றில் வெற்றி பெற்ற 1 மாணவன் 7 மாணவிகளை கல்வி சுற்றுலக்காக லண்டன் செல்வதற்காக சென்னை மாநகராட்சி கல்வி குழு தலைவர்  விஸ்வநாதன் இனிப்பு வழங்கி சென்னை விமான நிலையத்திற்கு வழியனுப்பினார்.

மேலும் அவர்களின் செலவுக்காக  (100 பவுண்ட்) ரூ.10,000 வழங்கப்பட்டது. அங்கு விமான நிலையம் வந்த மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்தனர்.

Related Stories: