புதுடெல்லி: 2021-22-ம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது .பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்வதில் உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படுகிறது. அந்த வகையில் , 2021-2022 -ம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீடு உலக உணவு பாதுகாப்பு தினமான இன்று வெளியிடப்பட்டுள்ளது.