இடைத்தேர்தல் உத்தரகாண்ட் முதல்வர் தாமி அமோக வெற்றி

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சில மாதங்களுக்கு முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், காதிமா தொகுதியில் போட்டியிட்ட இதன் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட புஷ்கர் சிங் தாமி தோற்றார். எனினும், அவரே மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். எம்எல்ஏ.வாக இல்லாதவர் 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதனால், அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக, சம்பவாத் தொகுதி பாஜ எம்எல்ஏ கைலாஷ் கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து, இத்தொகுதியில் கடந்த 31ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா கடோரியை விட, 55 ஆயிரம் வாக்குகளை அதிகமாக பெற்று தாமி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலமாக, தனது முதல்வர் பதவியை தாமி தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

Related Stories: