தமிழகத்தில் 24 வருவாய் கோட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

சென்னை: வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் துணை ஆட்சியர் (பயிற்சி) சீர்காழி வருவாய் கோட்டாட்சியராகவும், தேனி துணை ஆட்சியர் (பயிற்சி) யுரேகா மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியராகவும்,  திருநெல்வேலி துணை ஆட்சியர் மகாலட்சுமி கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியராகவும், திருவண்ணாமலை துணை ஆட்சியர் அஜிதா பேகம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), கடலூர் துணை ஆட்சியர் ஜெயராஜ பவுலின் வேதாரண்யம் வருவாய்  கோட்டாட்சியராகவும், விழுப்புரம் துணை ஆட்சியர் ரூபினா கரூர் வருவாய்  கோட்டாட்சியராகவும், தஞ்சாவூர் ஜஸ்வந்த் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சிய ராகவும், குமரி  துணை ஆட்சியர் சரவணன் அரியலூர் வருவாய்  கோட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தர்மபுரி துணை ஆட்சியர் பூமா கோவை) வருவாய் கோட்டாட்சியராகவும், கிருஷ்ணகிரி துணை ஆட்சியர் அபிநயா திருமங்கலம் வருவாய்  கோட்டாட்சியராகவும், சேலம் துணை ஆட்சியர் கனிமொழி காஞ்சி வருவாய்  கோட்டாட்சியராகவும், புதுகை துணை ஆட்சியர் சுகிதா சிவகங்கை வருவாய் கோட்டாட்சியராகவும், திருச்சி துணை ஆட்சியர் பவித்ரா திருத்தணி வருவாய்  கோட்டாட்சியராகவும், திருப்பூர் துணை ஆட்சியர் வினோத் குமார் செய்யாறு  வருவாய் கோட்டாட்சியராகவும், நாமக்கல் துணை ஆட்சியர் சவுமியா சங்ககிரி வருவாய் கோட்டாட்சியராகவும், திண்டுக்கல் துணை ஆட்சியர் விஸ்வநாதன் அரூர் வருவாய் கோட்டாட்சியராகவும், ஈரோடு துணை ஆட்சியர் சங்கீதா திருவாரூர் வருவாய் கோட்டாட்சியராகவும், சிவகங்கை துணை ஆட்சியர் கீர்த்தனா மணி மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியராகவும், தூத்துக்குடி துணை ஆட்சியர் சதீஷ்குமார் ஈரோடு வருவாய் கோட்டாட்சியராகவும், மதுரை துணை ஆட்சியர் திவ்ய பிரியதர்ஷினி கோபி செட்டி பாளையம் வருவாய் கோட்டாட்சியராகவும், திருவாரூர் துணை ஆட்சியர் தனலட்சுமி இ-சேவை முகமை துணை ஆட்சியராகவும், தூத்துக்குடி பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுப்புலட்சுமி  திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியராகவும், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அனிதா சாத்தூர் வருவாய் கோட்டாட்சியராகவும் மாற்றம்  செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: