பிரெஞ்ச் ஓபன் காலிறுதியில் இன்று நடால்-ஜோகோவிச் மோதல்: நேருக்கு நேர்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகினறன. அதில் ஒரு ஆட்டத்தில்  உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களான  செர்பியாவின் நோவக் ஜோகோவிச்(35வயது, முதல் ரேங்க்), ஸ்பெயினின் ரபேல் நடால்(35வயது, 5வது ரேங்க்) ஆகியோர் மோதுகின்றனர். இருவரும் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்கள். இந்த தொடரில் வென்றால் 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டம்  என்பதுடன் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற சாதனையை படைக்க முடியும்.அதனால் வெற்றிக்காக இருவரும் மல்லுக்கட்டுவார்கள்.  அதே நேரத்தில் பிரெஞ்ச் ஓபனில் இதுவரை 13 முறை சாம்பியன் பட்டம் வென்ற முன்னாள் சாம்பியன் நடால் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி உள்ளார். நடப்பு சாம்பியனான ஜோகோவிச்  2முறை தான் பிரெஞ்ச் ஓபனை வென்றவர் இடையில் நெம்பர் ஒன் இடத்தை இழந்தார்.

கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் மோதினர். அதில் ஜோகோவிச் போராடி வென்றார். நடப்புத் தொடரில் 4 சுற்றுகளிலும் ஜோகோவிச் தலா 3-0 என நேர் செட்களில் வென்றுள்ளார். ஆனால் நடால் 4வது சுற்றில் பெலிக்சிடம் 3-2 என்ற கணக்கில் போராடி வென்றார். அதேபோல் மற்றொரு காலிறுதியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ்(25வயது, 3வது ரேங்க்), இளம் வீரர் ஸ்பெயனின் கார்லோஸ் அல்கராஸ்(19வயது, 6வது ரேங்க்) ஆகியோர் களம் காணுகின்றனர். இப்படி முன்னணி வீரர்கள் மோதுவதால் இன்றைய காலிறுதி ஆட்டங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜோகோவிச்-நடால்

இருவரும் இதுவரை 58 ஆட்டங்களில் நேருக்கு நேர் களம் இறங்கியுள்ளனர். இந்த  ஆட்டங்கள் எல்லாம் இறுதி, அரையிறுதி, காலிறுதி  சுற்று ஆட்டங்கள்தான். அவற்றில்  ஜோகோவிச் 32 ஆட்டங்களிலும், நடால் 28 ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளனர்.

Related Stories: