எம்பியாக எனக்கு தகுதியில்லையா?.. மகிளா காங். நிர்வாகி நக்மா கேள்வி

புதுடெல்லி: மாநிலங்களவை எம்பியாவதற்கு எனக்கு தகுதி இல்லையா? என்று நடிகையும், மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளருமான நக்மா கேள்வி எழுப்பி உள்ளார். நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் பெயர் பட்டியல் நேற்று வௌியிடப்பட்டது. இந்த முறை மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நடிகையுமான நக்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவரது பெயரை காங்கிரஸ் தலைமை அறிவிக்கவில்லை. இந்நிலையில் அதிர்ச்சியடைந்த நக்மா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘காங்கிரஸ் கட்சியில் இணைந்த போது கடந்த 2003 - 04ம் ஆண்டில் மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என சோனியாகாந்தி உறுதி அளித்திருந்தார். கட்சியில் இணைந்து 18 ஆண்டுகள் ஆகியும் எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஏன், மாநிலங்களவை எம்பியாவதற்கு எனக்கு தகுதி இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: