மருத்துவ குணம் கொண்ட தேங்காய் பூவுக்கு மவுசு-வாங்கி உண்பதில் மக்கள் ஆர்வம்

பெரம்பலூர் : பெரம்பலூரில் அமோகமாக தேங்காய் பூவுக்கு மவுசு கூடியுள்ளது. உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்டதால் மக்கள் வாங்கி உண்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.வாழை மரம் எப்படி அடி முதல் நுனி வரை மனிதர்களுக்கு பயன்படுகிறதோ அதேபோல் தென்னை மரம் முழு வதும் தேங்காய், இளநீர், கள், தென்னை மட்டை கீற்று பின்னவும் பயன்படுகிறது.

அதேபோல் தேங்காய் இளநீர் தவிர தேங்காய் பூ பயன்பாடு மக்களுக்கு தெரிய வந்துள்ளதால் அதனை வாங்கி சாப்பிட மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். நார் உரிக்காத தேங்காயை அப்படியே முளைக் வைத்தால் குறிப்பிட்ட காலத்தில் தென்னங்கன்று துளிர் விட்டவுடன் பிடுங்கி மட்டை உரித்து எடுத்து வந்து அதில் பூப்போல பதம் மாறியுள்ள தேங்காய்ப் பூ தற்போது ருசிக்காவும், மருந்துக்காகவும் விற்கப்படுகிறது. பெங்களூரு, ஒசூர், தருமபுரி பகுதிகளில் இருந்து இறக்குமதியாகியுள்ள தேங்காய்ப் பூ பெரம்பலூரில் வெங்கடேசபுரம், சங்குபேட்டை, பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் தள்ளுவண்டிகளில் வைத்து ரூ.80, 100 ஆகிய விலைகளில் விற்கப்படுகிறது.

வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றை குணப்படுத்தும், சர்க்கரை நோய்க்கு, தைராய்டு, அல்சர், ரத்த சோகை ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக உள்ளது. மேலும் சிறுநீர் பிரச்னையை குணப்படுத்தும், ரத்த அழுத்தத்தை சீராக்கும், தோல் சம்மந்தப்பட்ட வியாதிகளைக் குணப்படுத்தும். புற்றுநோய்க்கு சிறந்த மருந்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்கும், மாதவிடாய் சுழற்சியை சீராக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம் என்ற விளம்பர பதாகைகளுடன் விற்கப்படுவதால் பெரம்பலூர் நகர வாசிகள் பெரிதும் ஆர்வம் காட்டி விரும்பி வாங்கிச் சாப்பிடுவ தால் தேங்காய்ப்பூ விற்பனை விறுவிறுப்படைந்து காணப்படுகிறது.

Related Stories: