பறக்கையில் ₹12 லட்சத்தில் நெல்கொள்முதல் நிலையம்-விவசாயிகள் மகிழ்ச்சி

நாகர்கோவில் :  குமரி மாவட்டத்தில் தேரூர், செண்பகராமன்புதூர், கிருஷ்ணன்கோவில், திங்கள்நகர் உள்பட பல்வேறு இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் உள்ளன. பறக்கை பகுதியில் விளைவிக்கப்படும் நெல்லை  புத்தளம் பகுதியில் அமைந்துள்ள  நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள்  கொடுத்து வந்தனர். இதனால் நேரவிரயம் ஏற்பட்டு வந்தது.எனவே பறக்கையில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் என  விவசாயிகள் கலெக்டரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

கோரிக்கையை ஏற்று கலெக்டர் பறக்கை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க உத்தரவிட்டார். முதற்கட்டமாக நெல்கொள்முதல் நிலையம் அமைக்க ₹12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்கொள்முதல் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிலையில் நெல்கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட வேலை நேற்று தொடங்கியது. இதனால் பறக்கை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: