வாடகைத் தாய் நெறிமுறை சட்டம் ஆறு வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: நாடு முழுவதும் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவது தற்போது வணிக ரீதியாக அதிகரித்து விட்டது. இதனை அடிப்படையாக் கொண்டுதான் கடந்த 2021ம் ஆண்டு, ‘வாடகை தாய் நெறிமுறை சட்டம்- 2021’ உருவாக்கப்பட்டது.

* குடும்ப உறவினர் இல்லாத ஒருவரிடம் பணம் பெற்றுக் கொண்டு வாடகைத் தாயாக இருப்பதை இந்த சட்டம் தடை செய்கிறது.

* கர்ப்ப காலத்தின் போதும் குழந்தைப் பேறுக்கு பிறகும் மொத்தமாக 16 மாதங்கள் வாடகைத் தாய்க்கான காப்பீட்டு பலன்களை தரவேண்டும்.

* திருமணமாகி குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த இந்திய தம்பதிகள் மட்டும்தான் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.

- இதுபோன்ற பல்வேறு முக்கிய நெறிமுறைகள் இந்த சட்டத்தில் அடங்கியுள்ளன. அதேப் போன்று குழந்தைப்பேறு இல்லாத பெண்கள், மாற்று வழியில் கருத்தரிக்கும் இனப்பெருக்கத் தொழில்நுட்ப மருத்துவ மையங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.இந்த சட்ட வடிவத்தில் இருக்கும் முக்கிய சிக்கல்களை சுட்டிக்காட்டியும், அவற்றை வரையறை செய்யும்படியும் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை நேற்று விசாரித்த நீதிமன்றம், ஒன்றிய அரசு இதற்கு 6 வாரத்தில் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

Related Stories: