மலைகளின் இளவரசியான கொடைக்கானல் நகருக்கு வயது 177 : நகரில் முதல் குடியேற்றம் அடைந்த நாள் கொண்டாட்டம்

கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு வயது 177. கொடைக்கானல் நகரில் முதல் குடியேற்றம் அடைந்த நாளை அடிப்படையாக வைத்து ஆண்டு தோறும் மே 26ம் தேதி கொடைக்கானலில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. மலைகளின் இளவரசியாக திகழும் கொடைக்கானலுக்கு இன்று 177வது பிறந்த தினம், ஆங்கிலேயர்கள் 1845ம் ஆண்டு முதல் முதலில் கொடிகள் அடர்ந்த சோலை காடுகளுக்கு நடுவில் ஒய்வு இல்லம் உருவாக்கப்பட்டது. அவர்களால் முதல் குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டு நகர் பகுதியாக துவக்கப்பட்ட நாளாக மே 26ம் தேதி என கல்வெட்டுகளில் உள்ளது.

விண்ணை முட்டும் மலைகளும் மேகங்கள் தவழ்ந்து செல்லும் மலை முகடுகளும் நடுவே இயற்கை எழில் கொஞ்சம் காட்சிகளை கொண்டது. முக்கிய சுற்றுலா தளங்களக திகழும் நட்சத்திர ஏறி, மன்னவனூர் சூழல் சுற்றுலா, குணா குகை, பூம்பாறை உள்ளிட்டவை மட்டும்மல்லாது மலை மக்கள் அறிந்திடாத அதிசய இடங்களும் பல லட்சம் தாவரங்களும் இங்கே அடங்கி இருக்கிறது. வணிகநோக்கில் கொடைக்கானல் நகரம் வரள்ச்சி அடைந்து வந்தாலும் இங்கே இருக்ககூடிய இயற்கையையும் சுற்றுசுழல்களையும் காப்பாத்த வேண்டும் என்பதே இங்கே வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மாற்று உள்ளூர்வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: