பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சேலத்தில் தீவிர விசாரணை

சேலம்: சேலத்தில் இருந்து டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் சென்றுள்ளது. இதையடுத்து மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சேலத்தில் முகாமிட்டு விசாரணையை தொடங்கினர். அந்த கடிதம் சேலம் தலைமை தபால் நிலையத்தில் இருந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மிரட்டல் கடிதம் எழுதியதாக ஒருவர் மீது மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் நீதிமன்றத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியவர். இவரது மகன் சென்னையில் அரசு ஊழியராக பணியாற்றியபோது உயிரிழந்தார். இதையடுத்து எல்ஐசி பணம் ரூ.10 லட்சத்தை பறித்த மருமகளை பழிவாங்க அவரது தந்தையை சிக்க வைக்க சேலம் கோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். தற்போது அவரது  மகனின் மாமனாரை சிக்க வைக்கும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அதுபற்றி விசாரணை நடக்கிறது.

Related Stories: