கிரீஸில் நடைபெற்ற சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி: இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் தங்கம் வென்று சாதனை

கிரீஸ்: கிரீஸ் நாட்டில் உள்ள கலிதியா நகரில் நடைபெற்ற 12வது சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பாக இந்த போட்டியில் முரளி ஸ்ரீசங்கர் கலந்து கொண்டுள்ளார். இவர் கடந்த மாதம் 8.36 மீட்டர் தூரம் தாண்டி தேசிய சாதனை படைத்தவர் ஆவார். போட்டி துவங்கியதும் முரளி ஸ்ரீசங்கர் 8.31 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஸ்ரீசங்கரைத் தொடர்ந்து ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தோபியாஸ் மான்ட்லர் 8.27 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கமும் 8.17 மீட்டர் தாண்டி பிரான்ஸ் வீரர் ஜூல்ஸ் பொம்மெரி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

கேரளாவில் பிறந்து சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முரளிக்கு வயது வெறும் 23 மட்டுமே  2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான இந்தியக் குழுவில் தேர்வானார் முரளி ஆனால் போட்டிக்கு 10 நாட்களுக்கு முன்பு குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அவசர அறுவை சிகிச்சை ஒன்றை செய்து கொண்டார். இதன் விளைவாக எடை இழப்பு மற்றும் சரியாக நடக்க இயலாமை அவருக்கு ஏற்பட்டது. இதன்பின் மிக விரைவாக மீண்டெழுந்த முரளி தற்போது இந்தியாவுக்காக பதக்கம் வெல்லும் இளைஞராக உருவெடுத்து விட்டார்.

Related Stories: