வங்கதேசத்துடன் 2வது டெஸ்ட் இலங்கை நிதான ஆட்டம்

மிர்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல்  இன்னிங்சில், இலங்கை நிதானமாக விளையாடி ரன் குவித்து வருகிறது.மிர்பூரில்  நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில்  365 ரன் குவித்து ஆல் அவுட்டானது (116.2 ஓவர்). தொடர்ந்து 2வது நாளான நேற்று முன்தினம்  முதல் இன்னிங்சை தொடங்கிய  இலங்கை ஆட்ட நேர முடிவில்  46 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்திருந்தது. கேப்டன் கருணரத்னே 70*,  ரஜிதா (0) இருவரும் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ரஜிதா ரன் ஏதும் எடுக்காமலும், கருணரத்னே 80 ரன்னிலும் (155 பந்து, 9 பவுண்டரி) ஆட்டமிழந்தனர்.

அதன் பிறகு இணை சேர்ந்த ஏஞ்சலோ மேத்யூஸ் , தனஞ்ஜெயா இருவரும் 5வது விக்கெட்டுக்கு  பொறுப்புடன் விளையாடி 102 ரன் சேர்ந்தனர். அரைசதம் அடித்த தனஞ்ஜெயா  58 ரன்னில் (95 பந்து, 9 பவுண்டரி) ஆட்டமிழந்தார். 3ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன் எடுத்துள்ளது (97 ஓவர்). மேத்யூஸ் 58 ரன் (153 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), தினேஷ் சண்டிமால் 10 ரன்னுடன் களத்தில் உள்ளனர். வங்கதேச பந்துவீச்சில் ஷாகிப் அல் ஹசன் 3, எபாதத் உசேன் 2 விக்கெட் கைப்பற்றினர்.

Related Stories: