3 பாக். தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: இந்திய வீரர் ஒருவர் வீரமரணம்

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று காலை கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் போலீஸ்காரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் மூவரும் பாகிஸ்தானியர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த என்கவுன்டர் குறித்து ஐஜிபி விஜய் குமார் கூறுகையில், ‘பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள். இவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துடன் தொடர்புடையவர்கள். கடந்த 4 மாதங்களாக இந்தப் பகுதியில் செயல்பட்டு வந்தனர். அவர்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்தாண்டு இதுவரை 22 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்’  என்றார்.

Related Stories: