மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை

திருவள்ளூர்: பேரம்பாக்கம் நல்லாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மேகநாதன்(36), கார்பெண்டர். இவருக்கு திருமணமாகி ஹேமலதா(32) என்ற மனைவியும், துளசி(11), கோகுல்(8) என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், குடிப்பழக்கம் கொண்ட மேகநாதன் கடந்த சில மாதங்களாக குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக ஹேமலதா தன் கணவர் மீது கோபித்துக்கொண்டு 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த மேகநாதன் வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: