சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ.1.13 கோடி, 3 கிலோ தங்கம் காணிக்கை

திருச்சி: சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அப்படி வரும் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்துவது வழக்கம்.  கோயில் உண்டியல்கள் மாதம் இருமுறை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படும்.

அதன்படி நேற்று கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயில் மண்டபத்தில் கோயில் ஆணையர் கல்யாணி தலைமையில் அறநிலையத் துறை அலுவலர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் ரூ.1 கோடியே 13 லட்சத்து 43 ஆயிரத்து 175 ரொக்கம், 2.932 கிலோ கிராம் தங்கம், 5.766 கிலோ கிராம் வெள்ளி, 56 வெளிநாட்டு நோட்டுகள் இருந்ததாக கோயில் ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.

Related Stories: