குவாலிபயர் 1ல் இன்று குஜராத்- ராஜஸ்தான் மோதல்

கொல்கத்தா: ஐபிஎல் பைனலுக்கு நேரடியாக முன்னேறும் வாய்ப்பு யாருக்கு என்பதை தீர்மானிக்கும் ‘குவாலிபயர் 1’ ஆட்டத்தில் குஜராத் - ராஜஸ்தான் இன்று மோதுகின்றன.மும்பை, புனேவில்  நடந்த லீக் சுற்றின் முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூர் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு  முன்னேறியுள்ளன.  அதில் இன்று நடக்கும் முதல் ‘தகுதிச் சுற்று’ ஆட்டத்தில் குஜராத் - ராஜஸ்தான் மோதுகின்றன. ஹர்திக் தலைமையிலான குஜராத், அறிமுக சீசனிலேயே முதல் இடம் பிடித்து பிளே ஆப் சுற்றில் விளையாடுகிறது.

இந்த சாதனையை, 2008ல் நடந்த முதல் சீசனில் ராஜஸ்தான் அணியும்  படைத்துள்ளது. அப்போது ஷேன் வார்ன் தலைமையில் கோப்பையையும் வென்றது குறிப்பிடத்தக்கது. சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இன்றைய  ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறும். தோற்கும் அணி 2வது குவாலிபயர் சுற்றில் விளையாட வேண்டும். பைனலுக்கு செல்ல 2 வாய்ப்புகள் இருந்தாலும் முதல் வாய்ப்பிலேயே முந்த முன்னாள் சாம்பியன் ராஜஸ்தானும், அறிமுக அணி குஜராத்தும் வரிந்துகட்டுகின்றன.

Related Stories: