தனியார் துறைமுகத்தை கண்டித்து மீனவர்கள் போராட்டம்

பொன்னேரி: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக எல் அண்ட் எனும் தனியார் நிறுவனத்தின் துறைமுகம் இயங்கி வருகிறது. இங்கு துறைமுகம் இயங்கும்போது இப்பகுதியில் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் என்ற நிலையில், இங்கு மீனவ பகுதிகளை சேர்ந்த 1750 பேருக்கு புதிதாக அமையவிருக்கும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக எல் அண்ட் டி துறைமுக நிறுவனம் இதுவரை 650 பேரை குறைந்த சம்பளத்துக்கு ஒப்பந்த பணியில் அமர்த்தியது. எனினும், அவர்களின் பணி இன்றுவரை நிரந்தரம் செய்யப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 31ம் தேதி முதல் தங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 650 பேரும் அப்பகுதி மீனவர்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் இறங்கினர். எனினும், இதுவரை அந்நிறுவனமோ, தமிழக அரசோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், எல் அண்ட் டி துறைமுக நிர்வாகத்தின் அடாவடி போக்கை கண்டித்து இன்று காலை பழவேற்காடு பகுதி மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories: