75வது பிறந்த நாள் ஜூன் 4ம் தேதி எஸ்.பி.பிக்கு இசை அஞ்சலி

சென்னை: 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் காலமானார். இந்த நிலையில் வரும் ஜூன் 4ம் தேதி  எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 75வது பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி அன்றைய தினம் ‘எஸ்பிபி லைவ்சன்’ என்ற பெயரில் அவருக்கு இசை அஞ்சலி நிகழ்ச்சி ஒன்றை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் பாடிய பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி, இசையமைப்பாளர் தேவா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டரங்கம், அல்லது ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கலாம் என்று தெரிகிறது.

Related Stories: