தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்வின் 4ம் ஆண்டுநினைவுநாள்: பல்வேறு இடங்களில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி,

தூத்துக்குடி: தூதுக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் இந்த கோர நாளின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தூத்துக்குடின் பல்வேறு பகுதிகளில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. பாத்திமா நகர் பகுதில்லுள்ள தேவாலயத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் உயிர் நீத்தவர்களின் குடும்பதினர் உயிர் இறந்தவர்களின் புகைப்படகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவட்டம் முழுவதும் நடைபெறும் அஞ்சலி நிகட்சிக்காக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 2500 போலீசார் பாதுகாப்பு  பணியில்  ஈடுபடுகிறார்கள், நினைவு அஞ்சலி செலுத்துவது தொடர்பாக வெளிமாவட்டங்களை சேர்த்த எவரும் தூத்துக்குடி வருவதற்கு அனுமதி இல்லை என்ற அறிப்பையும் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணா விடுத்துகிறார்.

Related Stories: