திடீர் தீ விபத்தில் 3 கடைகள் நாசம்

ஆவடி: ஆவடி அருகே திடீர் தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து நாசமானது. ஆவடி அடுத்த வெள்ளானூர் பிரதான சாலையில் பிரசாத் என்பவர் துரித உணவகம், பெட்டி கடை மற்றும் பழரச கடை என வரிசையாக 3 கடைகளை நடத்தி வருகிறார். இதற்கிடையே, பிரசாத் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று மதியம் துரித உணவக கடையில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அந்த வழியாக வந்த பொதுமக்கள் பார்த்து ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் அடுத்தடுத்த 3 கடைகளும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: