பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து 27ம் தேதி ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்: தேமுதிக அறிவிப்பு

சென்னை: பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் வருகிற 27ம் தேதி ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்டத்தின் சார்பில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து வருகிற 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையேற்று கண்டன உரையாற்றுகிறார். ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: