இலங்கை - வங்கதேசம் முதல் டெஸ்ட் டிரா

சாட்டோகிராம்: இலங்கை - வங்கதேச அணிகளிடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி, டிராவில் முடிந்தது. அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் கடந்த 15ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 397 ரன் குவிக்க (குசால் 54, மேத்யூஸ் 199, சண்டிமால் 66), வங்கதேசம் 465 ரன் குவித்தது (ஹசன் ஜாய் 58, தமிம் இக்பால் 133, முஷ்பிகுர் ரகிம் 105, லிட்டன் தாஸ் 88). இதையடுத்து, 68 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன் எடுத்திருந்தது.

நேற்று நடந்த கடைசி நாள் ஆட்டத்தில் இலங்கை 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்த நிலையில் (90.1 ஓவர்), போட்டி டிராவில் முடிந்தது. ஒஷதா 19, எம்புல்டெனியா 2, கேப்டன் கருணரத்னே 52 ரன், குசால் மெண்டிஸ் 48 ரன், மேத்யூஸ் 0, தனஞ்ஜெயா டிசில்வா 33 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். தினேஷ் சண்டிமால் 39 ரன், நிரோஷன் டிக்வெல்லா 61 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வங்கதேச பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 4, ஷாகிப் அல் ஹசன் 1 விக்கெட் வீழ்த்தினர். ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தலா 4 புள்ளிகள் பெற்றன. 2வது மற்றும் கடைசி டெஸ்ட் மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் மே 23ம் தேதி தொடங்குகிறது.

Related Stories: