இங்கிலாந்து அணியில் மீண்டும் பிராடு, ஆண்டர்சன்

லண்டன்: நியூசிலாந்து அணியுடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் அனுபவ வேகப் பந்துவீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடு மீண்டும் இடம் பிடித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் இவர்கள் இருவரும் இடம் பெறாத நிலையில், தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 2ம் தேதி தொடங்குகிறது.

2வது டெஸ்ட் நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ளது (ஜூன் 10-14). இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராடு, ஹாரி புரூக், ஸாக் கிராவ்லி, பென் போக்ஸ் (விக்கெட் கீப்பர்), ஜாக் லீச், அலெக்ஸ் லீஸ், கிரெய்க் ஓவர்ட்டன், மேத்யூ பாட்ஸ், ஆலிவர் போப், ஜோ ரூட்.

Related Stories: