மாட்டிறைச்சி சர்ச்சை நிகிலா விமல் பரபரப்பு கருத்து

சென்னை: நாடு முழுவதும் பசுவதை கூடாது, மாடுகளை வெட்டக்கூடாது என்று ஒரு சாரார் பிரசாரம் செய்தும், வன்முறையில் ஈடுபட்டு வரும் நேரத்தில், இதுகுறித்து நடிகை நிகிலா விமல் தெரிவித்துள்ள கருத்து வைரலாக பரவி வருகிறது. அவர் கூறியதாவது: நம் ஊரில் பசுவை வெட்டுவது வழக்கமான ஒன்று. வெட்டக்கூடாது என்று இப்போதுதான் சொல்கிறார்கள். அது நம் பிரச்னை இல்லை. விலங்குகளைப் பாதுகாப்பது என்று முடிவு எடுத்து விட்டால் எந்த விலங்கையும் கொல்லக் கூடாது. ஆனால் பசுவுக்கு மட்டும் இங்கு தனித்துவமாக ஒன்றுமில்லை. வெட்டக் கூடாதென்றால் எதையும் வெட்டக்கூடாது, வெட்டுகிறோம் என்றால் எல்லாவற்றையும் வெட்டலாம். காடுகளை அழிவிலிருந்து பாதுகாக்க விலங்குகளை பாதுகாக்க வேண்டும்தான். அதற்காக பசுவை வெட்டக்கூடாது, கோழியை வெட்டலாம் என்பது என்ன நியாயம்? கோழியும் ஒரு உயிர்தானே. எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்றால், எல்லோரும் சைவமாக மாற வேண்டும். அது சாத்தியமா என்று தெரியவில்லை. நான் எல்லாமே சாப்பிடுவேன்.

Related Stories: