2019ம் ஆண்டு இளம்சிறார், சிறுமிகளின் ஆபாச படம் விவகாரம் இன்ஸ்டாகிராமில் நண்பருக்கு அனுப்பிய கல்லூரி மாணவன் கைது: அமெரிக்காவில் உள்ள இளம்சிறார் அமைப்பு அளித்த புகாரின் மீது போலீஸ் நடவடிக்கை

சென்னை: இணையதளத்தில் இளம் சிறார் மற்றும் சிறுமிகளின் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டாகிராம் மூலம் தனது நண்பருக்கு பகிர்ந்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். இணையதளத்தில் இருந்து இளம் சிறார் மற்றும் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்ய சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இளம் சிறார் மற்றும் சிறுமிகளின் ஆபாச படங்களுக்கான இணையதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி இணையதளம் மூலம் இளம் சிறார் மற்றும் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்யும் நபர்களை அமெரிக்காவை தலைமையிடமாக செயல்பட்டு வரும் இளம் சிறார் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு அமைப்பு கண்காணித்து வருகிறது.

அதன்படி கடந்த 30.4.2019ம் அண்டு சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த மாணவன் ஒருவன் தனியாக தனது பெயரில் இ-மெயில் ஐடியை உருவாக்கி அதன் மூலம் தடை செய்யப்பட்ட இணையதளங்களில் இருந்து இளம்சிறார் மற்றும் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்துள்ளார். பிறகு அந்த ஆபாச படங்களை தன்னுடன் படிக்கும் நண்பருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பி பாலூணர்வை தூண்டியுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கி வரும் இளம் சிறார் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு அமைப்பு சார்பில் மின்னஞ்சல் மூலம் சென்னையில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு அமைப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த புகார் மனு குறித்து குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு அமைப்பு சார்பில் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

அதன்படி, வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்ெபக்டர் கலா சம்பவம் குறித்து மாணவர் மீது வேப்பேரி காவல் நிலையத்தில் எழுத்துபூர்வமாக புகார் அளித்தார். அந்த புகாரின்படி வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சென்னை சூளை பகுதியை சேர்ந்த கார்த்திக்(18)(பெயர்மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த 2019ம் ஆண்டு பிளஸ்-1 படிக்கும் போது தனது பெயரில் இ-மெயில் முகவரி உருவாக்கி நூற்றுக்கும் மேற்பட்ட இளம்சிறார் மற்றும் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களுக்கு அனுப்பியது உறுதியானது.

அதைதொடர்ந்து வேப்பேரி போலீசார் நேற்று முன்தினம் இரவு தற்போது பிரபல கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வரும் கார்த்திக் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக மாணவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் இருந்து குழந்தைகள் அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் படி சென்னையில் உள்ள கல்லூரி மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு பிளஸ்-1 படிக்கும் போது ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்த சம்பவத்துக்கு 2022ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.

Related Stories: