ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் தங்கள் நாட்டிற்குள் நுழைய கனடா அரசு தடை விதிப்பு

கனடா: ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் தங்கள் நாட்டிற்குள் நுழைய கனடா அரசு தடை விதித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போர் காரணமாக ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடை விதித்தது.  

அதனை ரஷ்யா கண்டுகொள்ளாமல் தொடர்ந்து உக்ரைன் மீது போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், அவரது அரசு மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த 1,000 பேர் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யும் மசோதாவை கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, அந்நாட்டு பொது பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோ கூறியதாவது, புதின் ஆட்சியின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது, ரஷியாவை அதன் குற்றங்களுக்குப் பொறுப்பேற்கும் பல வழிகளில் ஒன்றாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா மீது பல தடைகளை கனடா விதித்த நிலையில், கனடாவிற்குள் நுழைய புதினுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: