குடமுருட்டி ஆற்றங்கரையில் ஈமக்கிரியை மண்டபம் முன் பழுதாகி கிடக்கும் குடிநீர் பைப்

வலங்கைமான்: வலங்கைமான் 5வது வார்டில் ஈமக்கிரியை மண்டபம் முன் சேதமடைந்து கிடக்கும் தண்ணீர் குழாயை சீர்செய்ய பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பேரூராட்சி ஐந்தாவது வார்டில் குடமுருட்டி ஆற்றங்கரையில் ஈமக்கிரியை மண்டபம் உள்ளது. இதன் அருகே பேரூராட்சி பராமரிப்பில் உள்ள குடிநீர் பைப் பல நாட்களாக உடைந்து கிடக்கிறது.

இதனால் ஈமக்கிரியை சடங்கின்போது தண்ணீருக்கு சிரமப்படும் நிலை இருந்து வருகிறது. இதனை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: