வடமாநிலங்களுக்கும் திராவிட சித்தாந்தத்தை கொண்டு சேர்க்க வேண்டும்: நடிகர் சத்யராஜ் வலியுறுத்தல்

திருவெறும்பூர்: திருச்சி தெற்கு மாவட்ட திமுக மாநகர ஓட்டுனர் அணி சார்பாக கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பெல் கம்யூனிட்டி ஹாலில் நேற்று நடந்தது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இதில் நடிகர் சத்யராஜ் பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் கல்வியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் 225 படங்கள் நடித்துள்ளேன். வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்திற்கு அதிகமாக வருகின்றனர். காரணம் அங்கு கல்வி தரம் சரியாக இல்லை.

அவர்களுக்கு சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலையை சொல்லிக் கொடுக்க வேண்டும். வடமாநிலங்களுக்கும் திராவிட சித்தாந்தத்தை கொண்டு சேர்க்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சி அவர்களுக்கு புரியும். உபியில் பாதிக்கு பாதி தான் பெற்றிருக்கிறார்கள். திராவிடம் தெரிந்திருந்தால் முழுமையும் பெற்று வந்திருக்கலாம். கோவையில் அவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு திராவிடம் பற்றியும், சித்தாந்தம் பற்றியும் எடுத்து கூறுவதற்கு ஆட்களை நியமிக்க வேண்டும். நான் உதவ தயார். அசாம், பெங்கால், பீகார் உள்ளிட்ட வட மாநிலதிற்கு திராவிட மாடலை கொண்டு செல்ல வேண்டிய கருவியாக நான் இருப்பேன் என்றார்.

The post வடமாநிலங்களுக்கும் திராவிட சித்தாந்தத்தை கொண்டு சேர்க்க வேண்டும்: நடிகர் சத்யராஜ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: