டிஎன்பிஎல் டி20 அணிகள் வீரர்கள் விவரம் அறிவிப்பு

சென்னை: டிஎன்பிஎல் டி20 தொடரில் பங்கேற்கும் அணிகளின் வீரர்கள் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியின் 6வது தொடர் ஜூன் 23ம் தேதி தொடங்குகிறது.  ஆட்டங்கள் அனைத்தும் சேலம், நத்தம், நெல்லை, கோவை மைதானங்களில் நடைபெறும்.  முதல் ஆட்டம் நெல்லையிலும், பைனல் ஜூலை 31ம் தேதி  சேலத்திலும் நடக்க உள்ளன.

இந்நிலையில், போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும், தக்கவைக்கப்பட்ட  வீரர்களை  தவிர்த்து எஞ்சிய இடங்களுக்கான புதிய வீரர்களை தேர்வு செய்யும் பணி நேற்று முன்தினம் முடிந்தது.  அதில் நெல்லை அணி அதிகபட்சமாக  10 வீரர்களையும், சேலம் திருச்சி அணிகள் தலா 7 வீரர்களையும் புதிதாக அணியில் சேர்த்துள்ளன. திண்டுக்கல், மதுரை, கோவை அணிகள் தலா 5 வீரர்களை தங்கள் அணியில் இணைத்துக் கொண்டன.  நடப்பு சாம்பியன் சேப்பாக்கம் குறைந்தபட்சமாக 2 வீரர்களை மட்டுமே தேர்வு செய்தது.

Related Stories: