விருதுநகரில் நடத்துனர் மீது மாணவர்கள் தாக்குதல்: போக்குவரத்து பாதிப்பு

விருதுநகர்: விருதுநகரில் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்களை கண்டித்த அரசு பேருந்து ஓட்டுனரையும், நடத்துனரையும் கல்லூரி மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அரசு பேருந்துகளை இயக்காமல் ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பிறகு போக்குவரத்து இயங்கியது.

Related Stories: