திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 17 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற மீன்பிடி திருவிழா: ஆயிரக்கணக்கான மக்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர்.

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் நீர் குறைந்ததால் இன்று காலை மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஊர் முக்கியஸ்தர் நாகராஜன் வெள்ளைநிற துண்டை சுழற்றி அனுமதி வழங்கினார்.

பின்னர் கரையில் தயாராக மீன்பிடி வலைகள் உடன் காத்திருந்த மக்கள் அனுமதி கிடைத்தவுடன் போட்டி போட்டுக்கொண்டு குளத்தில் இறங்கி மீன் பிடித்தனர். இதில் கட்லா, விரால், குறவை, கெளுத்தி, ஆயிரை போன்ற மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே ஒரு மீன் சுமார் 5 கிலோ எடையுடன் இருந்ததால் மக்கள் ஆர்வத்துடன் மீன் பிடித்தனர். மேலும், மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: