தாமஸ், உபர் கோப்பை பேட்மின்டன் இந்திய அணிகள் ஏமாற்றம்

பாங்காக்: தாமஸ், உபர் கோப்பை பேட்மின்டன் போட்டிகளின் 3 வது சுற்றில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தோல்வியைத் தழுவின. ஆண்களுக்கான தாமஸ் கோப்பை லீக் சுற்றில் சி பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா  ஏற்கனவே ஜெர்மனி, கனடா அணிகளை வீழ்த்தி நாக் அவுட் சுற்று  வாய்ப்பை உறுதி செய்து விட்டது. கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று  சீன தைபே அணியுடன் மோதிய இந்திய அணி 2-3 என்ற கனக்கில் போராடி தோற்றது.

ஒற்றையர் ஆட்டங்களில் கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரன்னாய் அபாரமாக வென்ற நிலையில், லக்‌ஷியா சென் தோற்று ஏமாற்றமளித்தார். இரட்டையர் பிரிவில்  சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி, எம்.ஆர்.அர்ஜூன் - துருவ் கபிலா ஜோடிகள் தோல்வியைத் தழுவின.

மகளிருக்கான உபர் கோப்பை டி பிரிவில் இடம் பிடித்திருந்த இந்தியா முதல் 2 லீக் போட்டியில் கனடா, அமெரிக்க அணிகளை வென்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி விட்டது. கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று கொரிய அணியுடன் மோதிய இந்தியா 0-5 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. எனினும், நாக் அவுட் சுற்றில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

Related Stories: