மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சுக்கு கொரோனா

நியூயார்க்: உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கொரோனா ெதாற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்றின் லேசான அறிகுறிகள் உள்ளன. கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதால் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன்.

தடுப்பூசி போட்டுக் கொண்டதால் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். மேலும் நான் பூஸ்டர் தடுப்பூசியும் போட்டுக் கொண்டேன். எனக்கு சிறந்த மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்துள்ளார். பில்கேட்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், தொற்று பாதிப்பு நீங்கும் வரை அவர் தனிமையில் இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: