கடந்த 2 ஆண்டுக்கு பிறகு வெகுவிமர்சையாக நடக்கும் திருச்சூர் பூரம் திருவிழா

பாலக்காடு: கேரளாவில் பிரசித்திப்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா வெகுவிமர்சையாக இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. இன்று கணிமங்கலம் சாஸ்தா கோயில் உற்சவர் யானை மீது ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத்தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு பஞ்சவாத்தியங்கள் அதிர விழா துவங்கியது. இன்று மதியம் 12.30 மணிக்கு பாறமேற்காவு கோயில் திருவீதியுலா செண்டைவாத்தியங்கள் முழங்க நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 2.45 மணிக்கு வடக்குநாதர் கோயில் வளாகத்தில் கிழக்கூட்டு அனியன்மாரார் தலைமையில் திருவம்பாடி பாண்டிமேளம் நடக்க உள்ளது. இதையடுத்து இன்று மாலை 5.30 மணிக்கு வடக்குநாதர் தேக்கின்காடு மைதானத்தில் 30 யானைகளின் அணிகலன் அலங்கார அணிவகுத்து மற்றும் யானைகள் மீது வண்ணக்குடைகள் மாற்றும் நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இன்று நடக்கிறது.

இதையடுத்து வடக்குநாதர் கோயில் கிழக்கு  கோபுரநடையில் பாறமேற்காவு கோயில் - திருவம்பாடி கோயில் உற்சவர்கள் யானைகள்  மீது எழுந்தருளி வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கு நிகழ்ச்சி நடைபெற  உள்ளது. யானைகள் மீது வண்ணக்குடைகள் மாற்றும் நிகழ்ச்சியை காண உள்ளூர், வெளியூர்  மற்றும் வெளிநாட்டினர் என பல்லாயிரக்கணக்கான மக்கள் தேக்கின்காடு  மைதானத்தில் குவிந்து வருகின்றனர். இத்திருவிழாவை முன்னிட்டு திருச்சூர் மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரிகள்,  அரசு, தனியார் அலுவலங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது. மேலும் திருச்சூருக்கு சிறப்பு அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

Related Stories: