ரஷ்யாவை பலவீனப்படுத்த சில அந்நிய சக்திகள் முயன்று வருகிறது: இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியை, ரஷ்யா வென்றதன் 77-வது ஆண்டுவிழாவில் அதிபர் புதின் பேச்சு

மஸ்கோ: ரஷ்யாவை பலவீனப்படுத்த சில அந்நிய சக்திகள் முயன்றுவருவதாக அந்நாட்டு அதிபர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் மீது கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது. மரியோபோல், கார்கீவ், ஒடேசா உள்ளிட்ட நகரங்களில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் அந்த நகரங்கள் முழுவதும் புகை மண்டலமாக காட்சியாகின்றன.

கார்கீவ்வில் ரஷ்ய இலக்குகளை குறிவைத்து உக்ரைன் ராணுவத்தினர் பதில் தக்குதல் நடத்தினர். இதனிடையே இரண்டாம் உலகப்போரில் நாசிகளின் ஜெர்மனியை, ரஷ்யா வென்றதன் 77-வது ஆண்டுவிழா அந்நாட்டில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. மஸ்கொவில் நடைபெற்ற ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு பார்வையாளர்களை கவர்ந்தது.

ஜெர்மனி மீதான ரஷ்யாவின் வெற்றி கொண்டாட்டத்தின் நிறைவாக நேற்றிரவு கண்கவர் வாணவேடிக்கைகள் நடைபெற்றன. துளர் இசைகளுக்கு நடுவாக வெடித்து சிதறிய பல வண்ண வணவேடிக்கைகள் இரவை பகலாக்கின.

வெற்றி கொண்டாத்தில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என்று மறைமுகமாக தெரிவித்தார். ரஷ்யா மீது மேற்கொள்ள இருந்த ஆக்கிரப்பை தடுக்க சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மற்றும் தேவையான நடவடிக்கை என்று அவர் தெரிவித்தார். நேட்டோ அமைப்பு மூலம் ரஷ்யாவை மிரட்ட சிலநாடுகள் திட்டமிட்டதும், அதற்க்கு பதிலடி கொடுத்துவருவதாகவும் புதின் தெரிவித்தார்.

இதனிடையே உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜெர்மனியின் பெர்லி நகரில் உக்ரைன் தேசியக்கொடி மின்னொளியில் ஜொலித்ததது. பிரான்ஸ் ஈபிள் டவரில் நீல மற்றும் மஞ்சள் நிறத்தில் மின் விளக்குகள் ஒளிர்ந்தன. இதனை ஏராளமானோர் தங்கள் செல் போனில் புகைப்படம் எடுத்தனர்.

Related Stories: