அணு ஆயுதங்களை முழுவதுமாக வடகொரியா கைவிட வேண்டும்: தென் கொரியாவின் புதிய அதிபர் பேச்சு

சியோல்: தென் கொரியாவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள யூன் சுக்-யியோல் வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட்டு அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். தென்கொரியாவின் மக்கள் சக்தி கட்சின் சார்பாக யூன் சுக்-யியோல் தென்கொரியாவின் புதிய அதிபராக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவி வகிக்கவுள்ளார்.

சியோல் நகரில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு பேசிய அவர் அணுஆயுத ஏவுகணை சோதனைகளை கைவிட்டு அமைதிப்பதைக்கு வடகொரியா திரும்பினாள் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்ய தென்கொரியா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

வடகொரியா அணுஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்துவருகிறது. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.

Related Stories: