மாட்ரிட் ஓபன் டென்னிஸ் அல்கராஸ் சாம்பியன்

மாட்ரிட்: ஸ்பெயினில் நடந்த மாட்ரிட்  ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், உள்ளூர் இளம் நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவுடன் (25வயது, 3வது ரேங்க்) மோதிய அல்கராஸ் (19வயது, 9வது ரேங்க்) 6-3, 6-1 என நேர் செட்களில் மிக எளிதாக வென்று முதல் முறையாக   மாட்ரிட் ஓபன் கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 2 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின்  காலிறுதியில் சக வீரர் ரபேல் நடாலையும் (35 வயது, 4வது ரேங்க்), அரையிறுதியில்  உலகின் நம்பர் 1 வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சையும் (34 வயது) வீழ்த்தி அசத்திய அல்கராஸ், நடப்பு சீசனில் வெல்லும் 4வது சாம்பியன் பட்டம் இது. ஏற்கனவே  பார்சிலோனா ஓபன்,  மயாமி ஓபன், ரியோ டி ஜெனீரோ ஓபன்  போட்டிகளில் அவர் பட்டம் வென்றிருந்தார். மாட்ரிட் ஓபன் வெற்றி மூலம் 955 தர வரிசை புள்ளிகள் பெற்ற அல்கராஸ் 4,773 புள்ளிகளுடன் 3 இடங்கள் முன்னேறி 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Related Stories: