பொன்னமராவதி அருகே தேனூர் ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த 780 காளைகள்-19 பேர் காயம்

பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே தேனூர் கிராமத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அமைச்சர ரகுபதி தொடங்கி வைத்தார். இதில் 780 காளைகள், 200 மாடு பிடி வீரர்கள் மூன்று சுற்றுகளாக பங்கேற்றனர்.பொன்னமராவதி அருகே தேனூர் கிராமத்தில் சித்திரை விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 780 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் நான்கு சுற்றுகளாக களம் கண்டனர்.

மருத்துவ பரிசோதனைக்கு பின்பே மாடுகளும், மாடுபிடி வீரர்களும் போட்டிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். போட்டி தொடங்கும் முன் இலுப்பூர் ஆர்டிஓ குழந்தைசாமி ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசிக்க வீரர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். ஜல்லிக்கட்டை சட்டஅமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனையடுத்து மற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

வெற்றி பெற்ற காளைகள் மற்றும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், பீரோ, வெள்ளிக்காசு, குக்கர், தங்கக்காசு, கட்டில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என 19 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இரண்டு பேர் மேல்சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். இதில் திமுக ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, ஊராட்சித்தலைவர் கிரிதரன், நகரச்செயலாளர் அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், தாசில்தார் ஜெயபாரதி, ஆர்ஐ வேளாங்கண்ணி, விஏஓ ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொன்னமராவதி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: