திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கோரி கம்யூ. போராட்டம்

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக குடியிருந்துவரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் என்றும் நீர்நிலை, கோயில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களை வெளியேற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கோபால் தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள், ‘’அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலம் குடியிருந்துவரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும். இதர வகை புறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்கவேண்டும், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும் வீடு கட்டும் திட்ட தொகையினை ரூ.5 லட்சமாக உயர்த்தி தர வேண்டும்’ என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதன்பிறகு கட்சி நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

Related Stories: