பீஜிங்: கொரோனா பரவலால் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள ஹாங்ஷு நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 10 முதல் 25ம் தேதி வரை நடைபெறுவதாக உள்ளது. இந்நிலையில் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக சீன ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.