டெல்லி அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை: மும்பையில் நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. புவனேஷின் முதல் ஓவரில் 5வது பந்தில் மன்தீப் சிங் ‘டக்’ அவுட் ஆனார். 2வதாக பந்து வீசிய அபாட் பந்தில், மிட்சல் மார்ஷ் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பிறகு வந்த கேப்டன் ரிஷப் அதிரடியாக ஆடி ஹாட்ரிக்ஸ் சிக்சர், ஒரு பவுண்டரி என 16 பந்தில் 26 ரன் அடித்தார். எனினும், கோபாலின் அதே ஓவரின் கடைசி பந்தில் பந்து இன்சைட் எட்ஜ் ஆகி ஸ்டம்புகளை தகர்த்து அவுட் ஆனார்.

இதன் பின்னர் பவுல் களம் இறங்கினார். ஒரு கட்டத்தில் உம்ரன் பந்துவீச்சில் நேரடியாக வந்த பந்தை கேப்டன் வில்லியம்சன் பிடிக்காமல் கோட்டை விட்டார். இதனால் ஒரு லைப் பெற்ற பவுல் அதிரடியாக ஆடினார். இதையடுத்து ரோமன் பவுல் 67 ரன் (35 பந்து, 6 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்தார். கடைசி ஓவரில் அவர் 19 ரன் குவித்தார். ஓபனராக களம் இறங்கிய டேவிட்வார்னர் அதிரடியாக ஆடி 92 ரன் (58 பந்து, 3 சிக்சர், 12 பவுண்டரி) எடுத்தார். இருவரும் கடைசி வரை அவுட் ஆகாமல் 207 ரன் குவித்தனர். இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி 208 ரன்னை வெற்றி இலக்கை எட்டும் வகையில் களம் இறங்கியது.

ஆனால் அணியின் தொடக்க வீரர்கள் வில்லியம்சன்-அபிஷேக் ஜோடி ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆனதால், பவர் பிளேவில் ரன்ரேட் குறைந்து. அதன் பிறகு களமிறங்கியவர்களில் ராகுல், மார்க்ராம்  ஜோடியால் சன்ரைசர்ஸ் வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. எனினும் அவர்கள் அவுட் ஆனதால், வெற்றி வாய்ப்பு மங்கியது. எனினும் பூரன் அதிரடி காட்ட மீண்டும் ஆட்டம் சன்ரைசர்ஸ் பக்கம் திரும்பியது. அவர் 62 ரன் (34பந்து, 6 சிக்சர், 2 பவுண்டரி) அடித்து எதிர்பாராதவிதமாக கேட்ச் ஆனார். அதன் பிறகு வந்தவர்கள் அதிரடி ஆட்டம் ஆடாததால், சன்ரைசர்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு186 ரன் எடுத்து, 21 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Related Stories: