இந்தியாவில் கொரோனாவால் 47.29 லட்சம் பேர் பலி: உலக சுகாதார அமைப்பு சர்ச்சை

புதுடெல்லி: கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  இதன் தாக்குதல் காரணமாக உலகளவில் இதுவரை 62.43 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இது, அந்தந்த நாடுகள் அளிக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட எண்ணிக்கையாகும். ஆனால், இந்த பலி எண்ணிக்கை அனைத்தும் தவறு என்று உலக சுகாதார அமைப்பு சமீப காலமாக கூறி வருகிறது. கணித மதிப்பீட்டு ஆய்வின்படி, கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளி விவரத்தை நேற்று அது வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

* இந்தியாவில் இதுவரையில்  5 லட்சத்து 23 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக ஒன்றிய அரசு கூறி வரும் நிலையில், 2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் வரையில், இந்தியாவில்  47 லட்சத்து 29 ஆயிரத்து 548 பேர் பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

* அதேபோல்,  உலகம் முழுவதும் இந்த காலக்கட்டத்தில் கொரோனா காரணமாக  நேரடியாகவும், மறைமுகமாகவும் மொத்தம் 14 கோடியே 90 லட்சம் பேர் இறந்திருப்பதாக அது தெரிவித்துள்ளது.

* இந்தியா உட்பட சில நாடுகளில் மட்டுமே இந்த கணித மதிப்பீட்டு முறையை உலக சுகாதார அமைப்பு பயன்படுத்தி இருக்கிறது. ஆனால், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை இந்த மதிப்பீட்டின் கீழ் உலக சுகாதார அமைப்பு கொண்டு வராதது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

* ஒன்றிய அரசு எதிர்ப்பு

 உலக சுகாதார அமைப்பின் இந்த தகவலுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தையும் நிராகரித்துள்ள அது, ‘உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடு கேள்விக்குறியதாக இருக்கிறது,’ என குற்றம்சாட்டி உள்ளது.

Related Stories: