பூண்டி, முட்டம், திற்பரப்பு பகுதிகள் ரூ.3 கோடியில் சுற்றுலா தலமாக்கப்படும்: செங்கை கொளவாய் ஏரியில் படகு சவாரி; அமைச்சர் மா.மதிவேந்தன் அறிவிப்பு

சென்னை: தமிழக  சட்டப் பேரவையில் நேற்று சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் மா.மதிவேந்தன் பேசியதாவது:

* திருவள்ளுவர்  சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்தை மேம்படுத்த கன்னியாகுமரியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக ஒரு புதிய படகு இறங்கு தளம் அமைக்கப்படும். முட்டம் கடற்கரை மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலாத் தலங்கள் ரூ.6 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும். திருவாரூர் முத்துப்பேட்டை அலையாத்திக் காடு பகுதியில் படகு சவாரி, நடைபாதைகள், பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் மற்றும் பிற வசதிகளுடன் கூடிய சுற்றுலாத் தலமாக மாற்றப்படும்.

* பூண்டி அணைக்கட்டு பகுதியில் நீர் விளையாட்டுகள், படகு சவாரி, சாகச விளையாட்டுகள் மற்றும் பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட சுற்றுலா தலமாக ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

* புதுக்கோட்டை முக்துக்குடா கடற்கரைப் பகுதியில் நீர் விளையாட்டுகள், படகு சவாரி, நடைபாதை, கடற்கரை விளையாட்டுகள் மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட சுற்றுலாத் தலமாக ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

* செங்கல்பட்டு மாவட்டம் கொளவாய் ஏரியில் படகு சவாரி, நீர் விளையாட்டுகள், பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் மற்றும் இதர வசதிகள் கொண்டசுற்றுலாத் தலமாக ரூ.1.50 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

*தூத்துக்குடி கடற்கரையில் நீர்  விளையாட்டுகள் மற்றும் கடற்கரை விளையாட்டுகள் போன்றவைகள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட கடற்கரை சுற்றுலாத் தலமாக ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

* இசிஆரில் ஆன்மிக, கலாசார பூங்கா

தமிழக  சட்டப் பேரவையில் நேற்று சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை  மீதான  விவாதத்துக்கு பதிலளித்த பின்பு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் மா.மதிவேந்தன் பேசியதாவது: கிழக்கு கடற்கரை சாலையில் ‘‘ஆன்மிக, கலாசார, சுற்றுச்சூழல் பூங்காவை’’ அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.1.50  கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உணவகங்கள் நவீனப்படுத்தப்பட்டு புதிய வணிகச் சின்னத்துடன் சந்தைப்படுத்தப்படும். சுற்றுலாப்  பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய கட்டுப்பாடு அறை அமைக்கப்படும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் கேரவன் வாகன நிறுத்துமிட பூங்காக்கள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 2 இடங்களில் அமைக்கப்படும். சுற்றுலா வழிகாட்டிகள் பதிவு செய்யவும்,  அவர்களின் திறனை மேம்படுத்தவும் ரூ.50 லட்சம் மதிப்பில் ஒரு புதிய திட்டம்  தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

* புகழ்பெற்ற 4 முக்கிய கோயில்களில் 3 டி லேசர் தொழில் நுட்பத்துடன் கூடிய ஒலி-ஒளி காட்சி

தமிழகத்தில் புகழ்பெற்ற 4 முக்கிய கோயிவில்களில் முப்பரிமான (3டி)லேசர் தொழில் நுட்பத்துடன் கூடிய ஒலி- ஒளி காட்சி அமைக்கப்படும்.  தமிழக சட்டப் பேரவையில் நேற்று சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் மா.மதிவேந்தன் பேசியதாவது: தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 4 முக்கிய கோயில்களில் முப்பரிமாண லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலி - ஒளிக்காட்சி இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து அமைக்கப்படும். ‘தென்னிந்தியாவின் ஸ்பா’ என்று அழைக்கப்படும் குற்றாலம், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் வகையில் கன்னியாகுமரியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக ஒரு புதிய படகு இறங்கு தளம் அமைக்கப்படும். சுற்றுலா வழிகாட்டிகளுக்காக ரூ.50 லட்சம் மதிப்பில் ஒரு புதிய திட்டம் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: