பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை பிரமோற்சவ துவக்கம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடாக திகழ்கிறது. கோயிலில் சித்திரை மாத பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வருகின்ற 15ம் தேதி வரை விழா சிறப்பாக நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கந்தனுக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பினர். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டுவருடங்களாக சித்திரை பிரமோற்சவ விழா நடத்தப்படவில்லை.  இதனால் தற்போது சித்திரை பிரமோற்சவ விழாவை பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

விழாவை முன்னிட்டு தினமும் காலை, இரவு நேரத்தில் உற்சவர் முருகர் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி தேர் வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றார். வரும் 12ம்தேதி தெய்வாணை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல் விவரம் வருமாறு; இன்று காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் கேடய உலா, நாளை வெள்ளி சூரிய பிரபை பூத வாகனம், 7ம்தேதி சிம்ம வாகனம், ஆட்டு கிடாய் வாகனம், 8ம் தேதி பல்லக்கு சேவை, வெள்ளி நாக வாகனம், 9ம் தேதி அன்ன வாகனம், வெள்ளி மயில் வாகனம், 10ம் தேதி மாலை 4 30 மணி புலி வாகனம், யானை வாகனம், 11ம் தேதி இரவு 7 மணி தங்கத் தேர், 12ம் தேதி யாளி வாகனம், தெய்வானை திருக்கல்யாணம், 13ம் கேடய உலா, சண்முகர் உற்சவம், 14ம் தேதி தீர்த்தவாரி, சண்முகர் உற்சவம் கொடி இறக்கம், 15ம் தேதி சப்தாபரணம், காதம்பரிவிழா.

Related Stories: