பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட தான்சானியா உதடு அசைவு பாடல் பிரபலத்துக்கு கத்திக்குத்து; ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டுகோள்

டோடோமா: பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட தான்சானியா நாட்டு உதடு அசைவு பாடல் புகழ் பிரபலத்துக்கு கத்திக்குத்து விழுந்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை கலக்கி வந்த தான்சானியா நாட்டை சேர்ந்த கிலி பால் என்பவரை, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கத்தியால் குத்தியதோடு மட்டுமல்லாது, கட்டைகளாலும் சரமாறியாக தாக்கியுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், அவரது கட்டை விரலில் கட்டு போடப்பட்டுள்ளது; காயமடைந்த கால்களுடன் ஸ்ட்ரெச்சரில் படுத்திருப்பதை போன்றுள்ளது.

ஆனால், அவர் எப்படி தாக்கப்பட்டார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் அப்டேட் தற்போது யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது. அதில், ‘சிலர் என்னை வீழ்த்த விரும்புகிறார்கள்; ஆனால் கடவுள் எப்போதும் என்னைக் காப்பாற்றுவார். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். இவர் தனது சகோதரி நீமாவுடன் இணைந்து, ஹாலிவுட் படங்கள் மட்டுமின்றி இந்தி திரைப்படப் பாடல்களுக்கும் தங்களது உதட்டு அசைவு மூலம் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு புகழ் பெற்றவர்கள் ஆவர். இவர்களை கடந்த பிப்ரவரியில் தான்சானியாவில் உள்ள இந்திய தூதரகம் கவுரவித்து விருது அளித்தது.

பிரதமர் மோடி கூட, தனது மன் கி பாத் உரையின் போது கிலி பால் மற்றும் அவரது சகோதரி நீமாவின் பணிகள் குறித்து பாராட்டினார். அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கிலி பாலும் வீடியோ வெளியிட்டார். முன்னதாக கடந்த ஆண்டு சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி நடித்த ‘ஷெர்ஷா’ படத்தில், அவரது சகோதரி நீமா பாலுடன் சேர்ந்த ‘ராடன் லம்பியான்’ பாடலை கிலி பால் தனது உதடு அசைவு மூலம் பாடியது இந்திய ரசிகர்களின் இதயத்தை ெதாட்டார். அப்போதிருந்து, இந்திப் படப் பாடல் வீடியோக்களை வெளியிட்டார். அவரை இன்ஸ்டாகிராமில் 3.6 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அந்த பட்டியலில் இந்தி பிரபலங்கள் ஆயுஷ்மான் குரானா, குல் பனாக் மற்றும் ரிச்சா சதா உள்ளிட்டோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: