கோடை சீசனுக்காக சிம்ஸ் பூங்கா கண்ணாடி மாளிகையில் மலர் அலங்காரம்

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்காக  2 ஆயிரம் தொட்டிகளில் மலர் அலங்காரம் செய்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுக்கு பிறகு கோடை சீசன் நடைபெற உள்ளது‌. இதன் ஒருபகுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி மே மாதம் 28 மற்றும் 29ம் தேதியில் நடைபெற உள்ளது. சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக பூங்கா முழுவதும் பொலிவுப்படுத்தப்பட்டு மலர் நாற்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது மலர்கள் அனைத்தும் பூக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக பூங்காவின் சிறப்பு வாய்ந்த கண்ணாடி மாளிகையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் கற்றாழை வகையை சேர்ந்த செடிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகை முன் நின்று புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Related Stories: