பயனர்களின் தனிப்பட்ட தகவல் திருட்டை தடுக்க கூகுள் சிறப்பு நடவடிக்கை: ‘தேடுதல் பிரிவில்’ மாற்றம்

வாஷிங்டன்: ஆன்லைன் தேடுதலில் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடு போகாமல் பாதுகாக்க,  கூகுள் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.கூகுள் இணையதளத்தில் பயனர்களின் முகவரி, தொலைபேசி எண்கள், இ-மெயில் முகவரி ஆகியவை சேமிக்கப்படுகிறது.  இமெயில்  முகவரி வைத்துள்ள குறிப்பிட்ட நபரின் முகவரி, தொலைபேசி ஆகியவை தேடுதல் பிரிவை கிளிக் செய்தால் எளிதில் கிடைக்கும். இது போன்ற தகவல்கள் மற்றும்  ஒருவரின் லாக் இன் ரகசிய தகவல் திருடப்பட்டால் அது பயனர்களுக்கு  ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்த தகவல்கள் ஆன்லைனில் கிடைக்கும்போது  அது  பயனர்களுக்கு  நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே,  தனிப்பட்ட தகவல்களை தேடுதல் பிரிவில் இருந்து நீக்க வேண்டும் என ஏராளமான பயனர்கள் கூகுளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதையடுத்து, பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் தேடுதல் பிரிவில் கிடைக்காதவாறு தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கூகுள் நிறுவனத்தின் சர்வதேச கொள்கை பிரிவின் அதிகாரி மிச்சேல் சாங்க் தெரிவித்தார்.

இதுகுறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இணையதளத்தில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தகவல்கள் திரட்டப்படுகின்றன.   அதுபோல், பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதும் முக்கியம். ரகசிய தகவல்கள், ஆன்லைன் பாதுகாப்பு ஆகிய 2ம் முக்கியமானவை. அதிலும், குறிப்பாக  இன்டர்நெட்டை பயன்படுத்தும்  ஒருவரின் தனிப்பட்ட முக்கிய விவரங்கள் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் இன்றியமையாதது,’ என குறிப்பிட்டுள்ளது.

Related Stories: