முதல் ஓவரிலேயே போட்டி கை நழுவி சென்று விட்டது: ஸ்ரேயாஸ் ஐயர்

தோல்வி  குறித்து கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், “பேட்டிங்கில் நாங்கள்  மெதுவாக துவங்கினோம், விரைவாக சில விக்கெட்டுகளையும் இழந்துவிட்டோம்.  வெற்றிக்கு போதுமான ரன் அடிக்கவில்லை என்பதே உண்மை. இதற்கு எந்த காரணத்தை  கூற விரும்பவில்லை. தவறுகளை சரி செய்து கொள்வதை தவிர வேறு வழியும் இல்லை.  இன்னும் 5 போட்டிகள் எஞ்சியுள்ளதால், அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முயற்சிப்போம்.

தோல்விகளை மறந்துவிட்டு அடுத்தடுத்த  போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதே முக்கியமானதாக இருக்கும். உமேஷ் யாதவ்  முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி, பந்துவீச்சை துவங்கினாலும், அதே ஓவரில்  11 ரன் விட்டுக்கொடுத்தார், என்னை பொறுத்தவரையில் அந்த ஓவரில் இருந்தே  போட்டி கை நழுவி சென்றுவிட்டது, என்றார்.

Related Stories: