மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 41வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி 7 போட்டியில் 3 வெற்றி, 4 தோல்வி என 7வது இடத்தில் உள்ளது. கடைசி போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக நோபால் சர்ச்சைக்கு மத்தியில் 15 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதை மறந்து இன்று வெற்றி நோக்கில் களம் காண்கிறது. மறுபுறம் கேகேஆர் முதல் 4 போட்டியில் 3ல் வென்று நல்ல தொடக்கம் கண்டது. ஆனால் கடைசி 4 போட்டியிலும் தோற்று 8வது இடத்தில் உள்ளது.